கரோனா வைரஸ் பரவலை சீனா சிறந்த முறையில் சமாளிக்கிறது: ட்ரம்ப் பாராட்டு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை சீனா சிறந்த முறையில் சமாளித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், கரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் சீனா, கரோனா வைரஸை ஒழிப்பதில் எந்த முயற்சியையும் இதுவரை கைவிடவில்லை. கரோனா வைரஸை ஒழிப்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். மேலும், நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ட்ரம்ப்பிடம் சீன அதிபர் கூறினார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், சீன அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் சீனாவைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதுவும் எளிதானது அல்ல. வானிலை சூடாகும்போது வைரஸ் பலவீனமடையும். பின்னர் காணாமல் போகும். கரோனா வைரஸ் பரவலை சீனா சிறந்த முறையில் சமாளிக்கிறது. அதிபர் ஜி ஜின்பிங் சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். நாங்கள் இது தொடர்பாக சீனாவுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சீனாவில் கரோனா வைரஸுகு 636 பேர் பலி

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உள்ள வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா முழுவதும் பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பலியான 73 பேரில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவீடாதீர்

கரோனா வைரஸ்: ட்ரம்ப்புடன் தொலைபேசியில் ஆலோசித்த சீன அதிபர்

வருமான வரி செலுத்துபவர்களில் 80 % பேர் புதிய திட்டத்துக்கு மாறி விடுவார்கள்: நிதியமைச்சகம் நம்பிக்கை

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளிப்படைத் தன்மை: சர்வதேச தர வரிசையில் இந்தியாவுக்கு தொடர் பின்னடைவு; முதலிடத்தில் ஆப்கானிஸ்தான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்