சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் கூறும்போது, “சீனாவில் வூஹன் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் கரோனா வைரஸால் 17,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,829 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் சுமார் 12,000-க்கும் அதிகமான மருத்துவமனைகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வூஹன் நகரிலிருந்து தங்கள் நாட்டு மக்களை அழைத்து வருவதற்கான முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்