கரோனா வைரஸைக் கையாளத் தயார்: சிங்கப்பூர் பிரதமர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

தற்போது, கரோனா வைரஸ் சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு இருப்பதாகவும், அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறும்போது, “ சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸை கையாள சிங்கப்பூர் தயராக இருக்கிறது. ஏனெனில் 2003 ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸால் ஏற்பட்ட மோசமான சூழலை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். கரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ் அளவுக்கு ஆபத்தானதாகத் தெரியவில்லை” என்றார்.

சார்ஸ் வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் 33 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

38 mins ago

வாழ்வியல்

29 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்