30 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலை: சீனாவின் பொருளாதாரம் 2019-ல் 6.1% மட்டுமே வளர்ச்சி

By செய்திப்பிரிவு

உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனா 2019-ம் ஆண்டில் 6.1% வளர்ச்சி மட்டுமே கண்டுள்ளது, இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்டுள்ளதாக சீன அரசுதரப்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுத் தேவையில் மந்தம், அமெரிக்காவுடனான வாணிப மோதல்கள் இந்த சரிவுக்குக் காரணம் என்று தேசிய புள்ளிவிவர கழகம் தெரிவித்துள்ளது.

1990ம் ஆண்டுக்குப் பிறகு வளர்ச்சி இவ்வளவு குறைவாக 2019-ல் தான் இருந்தது.

முதல் 3 காலாண்டுகளில் மெல்ல சரிவு கண்ட சீனப் பொருளாதாரம் 2019-ன் கடைசி காலாண்டில் கொஞ்சம் வேகமெடுத்தது அதனால்தான் 6.1 % வளர்ச்சி கண்டது என்கிறது அந்நாட்டு தேசியப் புள்ளியியல் கழகம்.

“உலகப்பொருளாதரமும் வர்த்தகமுமே மந்தமுகம் காட்டியுள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது” என்று புள்ளியியல் துறை தலைவர் நிங் ஜிஷே தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

விளையாட்டு

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்