இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி, மெக்கன் மார்கல் தம்பதி

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மெக்கன் மார்கல் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹாரிக்கும் மற்றும் அவரது மனைவி மெக்கனுக்கும் அரசு குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரசு குடும்பம் அறிவித்தது.

இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை உணர்த்து வகையில் புது வருடத்தில் ஆச்சரியமான முடிவை இளவரசர் ஹாரி அறிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மெக்கனும் விலகுகின்றனனர் என்பதே அந்த முடிவு.

இதுகுறித்து இளவரசர் ஹாரி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு முன்னேற்றத்திற்கான புதிய பாத்திரத்தை இப்புதிய வருடத்தில் துவக்க இருக்கிறோம். தற்போது இங்கிலாந்து வட அமெரிக்காவில் எங்கள் நேரத்தை செலவிட இருக்கிறோம். பதவியிலிருந்து விலகினாலும் இங்கிலாந்து ராணிக்கு செய்யவேண்டிய எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம். நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹாரியின் இம்முடிவுக்கு இங்கிலாந்து மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்