ஆஸ்திரேலியா காட்டுத் தீ: இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைப்பதற்காகப் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் காட்டுத் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகி உள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வியாழன்று தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் மாதம் முதல் காட்டுத் தீக்கு பலியான தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது” என்று செய்தி வெளியியிட்டுள்ளது.

காட்டுத் தீ குறித்து நியூ சவுத் வேல்ஸ் பகுதியின் தீயணைப்பு சேவை மையம் தரப்பில், “கற்பனை செய்ய முடியாத சூழ்நிலை நீடிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்களின் மறைவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்