ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: ராணுவ தளபதி பலி

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ராணுவ தளபதி பலியானார்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மர்ஜாஹ் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) சாலையோரத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. ஆப்கானிஸ்தான் ராணூவ தளபதி பலியானார். மேலும் இந்த குண்டு வெடிப்பில் உள்ளூர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர்.” என்றனர.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்ககுதலை தலிபான்கள் அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் 2016 ஆம் ஆண்டு தலிபான்களால் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் விடுவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்