3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய தபால் சேவை: 7 கடிதங்களை இந்தியாவிடம் வழங்கிய பாகிஸ்தான்

By செய்திப்பிரிவு

3 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய தபால் அதிகாரிகளிடம் 7 கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் திரும்பப் பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு அறிவித்தது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியாவுடனான பேருந்து சேவை, வர்த்தக சேவை மற்றும் தபால் சேவையை நிறுத்தியது.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் தபால் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 7 கடிதங்களை இந்திய தபால் அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.

இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பார்சல் சேவைகள் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

4 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்