அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை; முதலிடத்தில் சீனா- இரண்டாம் இடத்தில் இந்தியா

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2018 - 2019 ஆம் ஆண்டுகளில் 3% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதுடெல்லியில் இயங்கும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் குறித்த வருடாந்திர புள்ளிவிவர ஆய்வையும் இந்த அறிக்கை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் தரப்பில், “ இந்தியா - அமெரிக்கா இடையே மாணவர்கள் பரிமாற்றம் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த முடிகிறது.

மேலும், தொடர்ந்து 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் பயிலும் பிற நாடுகளின் மாணவர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்படுள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவு மாணவர்கள் பயிலும் நாடுகளின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் முதல், இரண்டு இடங்களில் சீனா, இந்தியா உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தென்கொரியா, சவுதி அரேபியா, கனடா, வியட்நாம், தைவான், ஜப்பான், பிரேசில், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்