ஆப்கான் படையிடம் சரணடைந்த 18 ஐஎஸ் தீவிரவாதிகள்

By செய்திப்பிரிவு

ஆப்கான் படையிடம் சுமார் 18 ஐஎஸ் தீவிரவாதிகள் சரணடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அசின் நகரில் சுமார் 18 ஐஎஸ் தீவிரவாதிகள் 24 பெண்கள் மற்றும் 31 குழந்தைகளுடன ஆப்கான் படையிடம் சரணடைந்தனர். சரணடந்த ஐஎஸ் தீவிரவாதிகளில் சிலர் தஜிகிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள்”என்று தெரிவித்துள்ளது.

ஐஏஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தேடுதல் வேட்டைக்கு பிறகு தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படையால் சிரியாவில் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும் தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பரவலை தடுக்க அந்நாட்டு ராணுவம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்