ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

காபூல்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 அதிகரித்துள்ளது. 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து நன்கர்ஹர் மாகாண ஆளுநர் கூறும்போது, “ ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

அப்போது தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது, மசூதியியின் கூரை விழுந்தது. இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். “ என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி தலைவர் கூறும்போது, “ மசூதி முற்றிலுமாக சிதைந்து விட்டது. என் மனதை உடைக்கும் காட்சிகளை நான் உணர்ந்தேன்” என்றார்.

மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தலிபான்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்