சிரியாவில் போர் நிறுத்தம்: அமெரிக்க அழைப்பை நிராகரித்த துருக்கி

By செய்திப்பிரிவு

சிரியாவின் வடக்குப் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது.

துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள்.

துருக்கியின் தாக்குதலால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இந்நிலையில் சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை துருக்கி நிராகரித்துள்ளது.

சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்