சவுதியைத் தாக்கியதுபோல் ஈரான் நம்மையும் தாக்கலாம்: இஸ்ரேல்

By செய்திப்பிரிவு

சவுதி எண்ணெய் ஆலைகளை ஈரான் தாக்கியது போல் நம்மையும் தாக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள யோவ் காலண்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யோவ் காலண்ட் கூறும்போது, “கடந்த மாதம் ஈரான் சவுதி எண்ணெய் ஆலைகளைத் தாக்கி அழித்ததுபோல் இஸ்ரேலையும் தாக்கலாம்.எங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால் இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

அமெரிக்கா மட்டுமில்லாது பிரான்ஸ், சவுதி, இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளன. ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் ஈரானுக்கும், சவுதிக்கும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

37 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

57 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்