ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் தமிழ்ப் பாடம்: முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், உல கிலேயே அதிக மக்களால் பேசப் படும் மொழிகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் 2-வது மொழியாகச் சேர்த்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது தமிழ் மொழியை, முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளிகளில் பயிற்றுவிக்க நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளி களில் 2-வது பயிற்று மொழியாக தமிழ் மொழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத் திட்டத்தையும் மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் தமிழ் தவிர இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மற்றும் மாசி டோனியா ஆகிய 5 மொழி கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம், நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் 2-வதாகப் பயிற்றுவிக்கப்படும் மொழிகளின் எண்ணிக்கை 69 ஆக உயரும்.

இதுகுறித்து மக்கள்தொகை புள்ளிவிவர அதிகாரி பெர்னார்ட் சால்ட் கூறும்போது, ‘‘ஆஸ்திரேலி யாவின் சிட்னி நகரில் வசிப்பவர் களில் 39 சதவீதம் பேர் வெளிநாட் டில் பிறந்தவர்கள். அவர்களுடைய வசதிக்காக பள்ளிகளில் தமிழ் உட் பட 2-வது மொழிகளை கூடுதலாக சேர்த்தது, ஆஸ்திரேலியாவின் நவீனகால சமூகத்தை பிரதிபலிப்ப தாக உள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘டார்சி ரோட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழையும் படிக்க முடியும். உலகளவில் வேலைவாய்ப்புகள் பெருகி வரும் சூழ்நிலையில், பல்வேறு மொழிகளில் பேசும் திறன் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்