ஆப்கானில் தலிபான்களின் வெறியாட்டம்: கார்குண்டு தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்

By செய்திப்பிரிவு

காபூல், ஏ.எஃப்.பி.

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக 3வது நாளாக தலிபான்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். வியாழனன்று (19-09-19) தலிபான்களின் கார்குண்டு சாபுலில் உள்ள மருத்துவமனை ஒன்றை தரைமட்டமாக்கியது, 20 பேர் பலியாகினர், மேலும் கிழக்குப் பகுதியில் மற்றொரு ட்ரோன் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

தலிபான்களின் வன்முறைகளினால் அப்பாவிப் பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். தலிபான்களுடன் பேச்சு வார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து படைகளை அங்கிருந்து அமெரிக்கா திரும்பப் பெறப்போவதில்லை என்ற ஆத்திரத்தில் தலிபான்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கும் தயாராகி வருகிறது.

ட்ரம்ப் பேச்சுவார்த்தைகள் ‘செத்துப் போய்விட்டது’ என்று ட்ரம்ப் அறிவித்ததையடுத்து தலிபானியர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 2001-ல் அதிகாரத்தை இழந்த தலிபானியர்கள் 4வது அதிபர் தேர்தலை நடத்த விடாமல் செய்யும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விடிகாலைப் பொழுதில் இன்றைய தினமாவது நல்ல தினமாக அமையாதா என்று மக்கள் கணிவிழிக்கும் நேரத்தில் தெற்கு ஆப்கன் நகரான குவாலத்தில் உள்ள மருத்துமனை மீது கார்குண்டை தலிபான்கள் வெடிக்கச் செய்ய 20 பேர் பலியாகினர், 90 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் செய்திக்கு சில மணி நேரங்கள் சென்றபிறகு கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று இரவு ஆளில்லா ட்ரோன் தாக்குதல் மூலம் 9 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியது. இவர்கள் மலைபகுதியில் முகாமிட்டிருந்தனர்.

செப்.9/11 தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்கா ஆப்கான் மீது படையெடுக்க 18 ஆண்டுகால இந்தப் பயங்கரப் போரில் ஏகப்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 2018-ல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆப்கான் படையினரின் வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு 2018-ல் அதிகரித்தது. முதன் முதலாக 500 பேர் படையினரின் தாக்குதலில் பலியான விவகாரம் ஆவணமயமானது.

இந்நிலையில் குவாலத்தில் உள்ள பாதுகாப்பு தேசிய இயக்குனரகம் கட்டிடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதல் அருகில் இருந்த மருத்துவமனையை கடும் சேதப்படுத்தியது என்று சாபுல் கவர்னர் ரஹ்மதுல்லா யர்மால் தெரிவித்தார்.

‘பயங்கரம்’- நேரில் பார்த்தவர்களின் பீதி வாக்குமூலம்

தலிபான்கள் உரிமை கோரிய இந்த கார்குண்டுத் தாக்குதலை நேரில் கண்டவர்கள் அந்த இடத்தி குடியிருந்த மக்களாவார்கள். கார்குண்டு சக்தி வாய்ந்ததாக இருந்தால் வீடுகள், வீடுகளின் ஜன்னல்கள் காலியாகின, இதனைத் தொடர்ந்து துப்பாக்கிக் குண்டு வெடிச்சப்தமும் காதுகளைப் பிளந்ததாகத் தெரிவித்தனர்.

ஆடிப் பலூச் என்ற பல்கலை மாணவர் கூறும்போது, “அது பயங்கரம், பெண்கள் குழந்தைகளின் உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட காட்சி பயங்கரம்” என்றார்

மேலும் மருத்துவமனைத் தாக்குதல் பற்றி கடை முதலாளி முகி அகமட் ஏ.எஃப்.பி.யிடம் கூறும்போது, “நான் குண்டுவெடிப்புப் பகுதிக்கு விரைந்தேன், அங்கு என் குடும்பத்தினர் இருந்தேன், அவர்களைத் தேடினேன் ஆனால் காணவில்லை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குண்டு வெடிப்பின் போது மருத்துவமனையில் என் தாயாரும் என் மனைவியும் இருந்தனர்” என்றார் பதற்றத்துடன்.

நங்கர் ஹார் மாவட்ட அரசப்படை தாக்க்குதலில் 9 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக் கவர்னர் ஷம்சுல் ஹக் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தார். “அதாவது தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளை நோக்கியதே, ஆனால் தவறாக பொதுமக்கள் இரையாகினர்” என்றார் நங்கர்ஹர் போலீஸ் சரக செய்தித் தொடர்பாளர் முபாரெஸ் அடல். ஒரு சிலர் பலி எண்ணிக்கையை 30 என்றனர்.

தாக்குதலில் தப்பிப் பிழைத்த பீர் முகமது என்ற 22 வயது தொழிலாளி, பைன் உணவுப்பொருளை எடுப்பதற்காக தொழிலாளர்கள் வந்தனர் அவர்கள் வேலை முடிந்து முகாம்களில் உறங்கிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்தது, என்றார்.

“எங்கள் நண்பர்களில் பலர் கொல்லப்பட்டனர், எந்தக் காரணமுமின்றி பலர் கொல்லப்படுகின்றனர்” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கண்டனம்:

இந்தத் தாக்குதல்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில், “தலிபான்கள் தாக்குதலைத் தொடரும் வரை பேச்சு வார்த்தைகள் இல்லை என்பதை அதிபர் தெளிவுபடுத்திவிட்டார்” என்று கூறியுள்ளனர்.

ஆனால் தலிபான்களோ தாங்கள் பேச்சுவார்த்தைகளுக்காகக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்றும் அமெரிக்கப் படையினரும் மக்களை கொன்று குவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

34 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

32 mins ago

சினிமா

50 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

44 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

58 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்