காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. மீண்டும் விளக்கம்

By செய்திப்பிரிவு

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இந்தியா ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை திரும்பப் பெற்றது. இந்த விஷயத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப முயன்று வருகிறது.

அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா தெரிவித்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் தனதாக்கிக் கொள்ள இந்தியா முயல்கிறது. இதனை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க ஐ. நா.வின் நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர் .

இதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆண்டோனியா கூறும்போது, “ காஷ்மீரில் உள்ள மக்களின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீர் தொடர்பான பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வது அவசியம் என்பதே எங்கள் கருத்து” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்