பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா: எண்ணெய் ஆலைகள் மீது ஏமன் படைகள் திடீர் தாக்குதல்

By செய்திப்பிரிவு

ரியாத்

சவூதியில் உள்ள அராம்கோ பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஏமன் கிளர்ச்சிப்படையினர் ஆள் இல்லா விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

சவுதி பிரஸ் ஏஜென்ஸிக்கு இளவரசர் அப்துல்லாஜிஸ் பின் சல்மான் அளித்த பேட்டியில், " ஏமன் கிளர்ச்சிப்படையினரின் தாக்குதலால் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது

அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த ஆலைகளில் தீப்பிடித்தது. அதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தத் தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஏமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், ஏமனில் உள்ள ஷியாபிரிவினரான ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும், சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மன்சூர் ஹாதி தலைமையிலான அரசுக்கு, அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது.அரசுப் படையினருக்கு ஆதரவாக, ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா விமானங்கள் மூலமும் சவூதி அரேபியாவுக்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீது கிளர்ச்சியாளர்கள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஏராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அமின் நசிர் கூறுகையில், " ஆலைகளில் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன, விரைவில் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் என்று நம்புகிறேன். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார்.ஈரானுடன் தொடர்புடைய ஹூதி களர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் 10 ஆள் இல்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று அல் மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த தாக்குதலுக்கு ஈரானை கடுமையாகக் கண்டித்துள்ள அவர்," உலகிற்கு எண்ணெய் வளங்களை அளித்துவரும் ஆலைகள் மீது எப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஏஎப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

55 mins ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்