சிரியாவில் துருக்கி ஆதரவுப் பகுதியில் குண்டுவெடிப்பு

By செய்திப்பிரிவு

சிரியாவில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பிரிட்டனில் இயங்கும் சிரிய கண்காணிப்புக் குழு , “சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அஃப்ரின் நகரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.

அஃப்ரின் பகுதியைக் கடந்த ஆண்டு துருக்கி ஆதரவு தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அங்கு அவ்வப்போது சிரிய அரசுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தக் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை

இந்நிலையில் துருக்கி - சிரிய எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால் தங்களது நாட்டுப் படை வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்