அசாம் என்.ஆர்.சி. வெளியீடு: பாக். பிரதமர் இம்ரான் கான் விமர்சனம்

By செய்திப்பிரிவு

தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்பட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்டதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டத்திருத்தம் அமலான பிறகே பிரதமர் மோடி தலைமை இந்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தின் அயல்நாட்டினரை வெளியேற்றும் திட்டமான தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டதையடுத்து இம்ரான் கான், என்.ஆர்.சி. இறுதிப் பட்டியல் அறிக்கையை டேக் செய்து தன் ட்விட்டரில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், தற்போது என்.ஆர்.சி. ஆகியவை முஸ்லிம் மக்களுக்கு எதிரானவை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மோடி அரசின் முஸ்லிம்கள் இன அழிப்பு குறித்து இந்திய, சர்வதேச ஊடகங்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணியை ஒலித்திருக்க வேண்டும். காஷ்மீரை சட்டவிரோதமாக இணைத்தது முஸ்லிம்களை குறிவைக்கும் பரவலான கொள்கையாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே அவர் மோடி அரசு குறித்து வெளியிட்ட கருத்துக்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது என்.ஆர்.சி. பற்றியும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்