அமெரிக்கா முதலிடம் பெற உதவிய இந்திய மாணவர்கள்

By பிடிஐ

பெருமைக்குரியதாக கருதப்படும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்கா முதலிடம் பெறுவதற்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் உதவியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து இந்த போட்டியில் கலந்துகொண்ட 6 மாணவர்கள் குழுவில் ஷியாம் நாராயணன் (17), யாங் லியு பாட்டீல் (18) ஆகியோர் இடம்பெற்றனர். இந்த இரு மாணவர்களும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இதில் யாங் லியு பாட்டீலின் தாயார் சீனாவை சேர்ந்தவர், தந்தை இந்தியர்.

சர்வதேச கணித ஒலிம்பி யாட் போட்டியில் 1994-ம் ஆண்டுக் குப்பிறகு முதல்முறையாக அமெரிக்கா முதலிடம்பெற்றுள் ளது என்று ட்விட்டர் வலைத்த ளத்தில் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாராட்டுக் கடிதத்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

பாட்டீல், நாராயணன் ஆகியோ ருடன் அமெரிக்க குழுவில் இடம்பெற்ற ரியான் அல்வைஸ், ஆலன் லியூ, டேவிட் ஸ்டோனர் ஆகிய 3 பேரும் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 6-வது உறுப்பினரான மைக்கோல் குரால் ஒரு புள்ளியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தாய்லாந்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. 4 புள்ளிகள் வித்தியாசத்தில் சீனாவை அமெரிக்கா 2-வது இடத்துக்கு தள்ளியது. தென்கொரியா 3-வது இடம் பிடித்தது. இந்தியா வுக்கு 37-வது இடம் கிடைத் துள்ளது. சீனா அதிகபட்சமாக 19 தடவை ஒலிம்பியாட் பதக்கத்தை வென்றுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்