பொது வாக்கெடுப்பில் கடன் மீட்புத் திட்டத்தை நிராகரித்தது கிரீஸ்: எதிர்ப்பு 61%, ஆதரவு 39%

By ஏபி

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸை கடனில் இருந்து மீட்க ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வ தேச நிதியம் ஆகியவை பரிந் துரைத்த கடன் மீட்புத் திட்டத்தை அந்நாட்டு மக்கள் நிராகரித்தனர்.

இது தொடர்பான வாக்கெடுப் பில் 61 சதவீத மக்கள் கடன் மீட்புத் திட்டத்தை எதிர்த்தும், 39 சதவீத மக்கள் கடன் மீட்புத் திட்டத்தை ஆதரித்தும் வாக்களித்தனர். இதன் மூலம் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான பொருளாதார கட்டுப்பாடுகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் ஏற்க மாட்டோம் என்பதை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கிரீஸ் மக்கள் உணர்த்தியுள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை யன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில், கடன் மீட்புத் திட்டத் துக்கு ஆதரவாக `ஆம்’ என்று வாக்களிக்க வேண்டுமென்று ஒரு பேரணியும், அதற்கு ஏதிராக `இல்லை’ என்று வாக்களிக்க வேண்டுமென்று மற்றொரு மாபெரும் பேரணியும் நடந்தது. கடன் மீட்பு திட்ட நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்று கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ரஸ் பொது மக்களை கேட்டுக் கொண்டார். இப்போது அவரது கோரிக்கையை பெரும்பான்மையான பொது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடன் மீட்புத் திட்டம் நிராகரிக் கப்பட்டதை அடுத்து அரசு ஆதர வாளர் நாடாளுமன்றத்துக்கு முன்னால் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

``இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் ஜனநாயகத்தை மிரட்டி பணியவைத்து விட முடியாது என்பதை கீரிஸ் மக்கள் உணர்த்தி யுள்ளனர் ’’ என்று அலெக்சிஸ் ஸிப்ரஸ் கூறியுள்ளார்.

எனினும் பிற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கிரீஸ் மக்களின் முடிவால் அதிருப்தி யடைந்துள்ளனர். இப்போது எழுந் துள்ள இக்கட்டான சூழ்நிலை குறித்து ஆலோசிக்க ஐரோப்பிய வட்டார நாடுகளின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து விவா திக்கப்படும் என்று தெரிகிறது.

கிரீஸ் மக்களின் முடிவை மதிக்க வேண்டும் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு முடிவு ஆசிய பங்குச் சந்தை வரை எதிரொலித்தது. இதனால் நேற்று காலை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரீஸ், கடந்த 5 ஆண்டு களாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டுக்கு நிதி உதவி அளித்து வந்த ஐரோப்பிய யூனியன் பல முறை சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையிலும் அதனை அந்நாட்டு மக்கள் மீது திணிக்க கிரீஸ் மறுத்து வந்தது.

சர்வதேச நிதியத்திடம் பெற்ற கடனில் ஒரு தவணையான ரூ.10 ஆயிரத்து 500 கோடியை கடந்த ஜூன் 30 ம் தேதிக்குள் கிரீஸ் செலுத்த தவறியது. இதன்மூலம், கடனை செலுத்த தவறிய முதலாவது வளர்ந்த நாடு என்ற அவப்பெயர், ஐரோப்பாவுக்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்த நாடு என்ற பெயர் பெற்ற கிரீஸுக்கு வந்த சேர்ந்தது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ரஸ் 2 ஆண்டுகள் கால அவகாசமும், கூடுதல் கடன் உதவியும் கேட்டார். ஆனால், இதனை ஐரோப்பிய நாடுகளின் அமைச்சரவை ஏற்கவில்லை.

கிரீஸ் நாட்டுக்கு கடன் அளித்து வரும் சர்வதேச நிதியம், ஐரோப்பிய நிதி அமைப்பு ஆகியவை கிரீஸுக்கு நெருக்கடி அளித்த நிலையிலும், கொடுத்த கடன்களை திருப்பி செலுத்துமாறு உடனடியாக அறிவுறுத்தவில்லை.

இவ்வாறு அறிவுறுத்தினால், யூரோவை பொது நாணயமாக கொண்ட கிரீஸ் நாடு ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கிரீஸில் பொருளாதாரம் முற்றி லும் சரிவதைத் தடுக்கும் நடவடிக் கையாக சமீபத்தில் வங்கிகள் மூடப்பட்டன. ஏ.டி.எம்-களில் எடுக்கும் பணத்தின் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்