எதிரி பறவைகளை ஏமாற்றும் ‘மிமிக்ரி பறவை’: ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரு பறவை இனம், தன்னுடைய குஞ்சுகளையும், கூட்டையும் பாதுகாப்பதற்காக, இதர பறவை களைப் போல குரல் மாற்றி தன்னை வேட்டையாட வரும் எதிரி பறவைகளை (ப்ரிடேட்டர்)ஏமாற்றுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளாது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பிரானிஸ்லாவ் இஜிக் கூறியதாவது: ஆஸ்திரேலி யாவில் காணப்படும் முள்ளலகி (தார்ன்பில்) இன பறவை தன்னுடைய குஞ்சுகளையும், கூட்டையும் பாதுகாப்பதற்கு தன்னுடைய பல‌குரல் திறனைப் பயன்படுத்துகிறது.

இதன் மூலம், இதர இரைக்கொல்லி பறவைகளைப் போல ஒலி எழுப்பி தன்னையும், தன் குஞ்சுகளையும் வேட்டையாட வரும் பறவைகளை அச்சுறுத்து கிறது. அந்தக் குரல்கள் அச்சு அசலாக மற்ற பறவைகளைப் போல இருப்பதில்லை. எனினும், ஓரளவு பொருந்திப் போகிற அந்த குரல்களைக் கேட்டு மற்ற பறவைகள் அஞ்சி, இதனை வேட்டையாடாமல் போகின்றன.

இது உருவத்தில் மிகவும் சிறிய பறவை. அதனால் இதனை விட 40 மடங்கு பெரிய உருவம் கொண்ட பறவைகளோடு மோத முடியாது. எனவே இந்த குரல் மாற்றி ஒலி எழுப்பும் வித்தையை இந்தப் பறவைகள் கொண்டிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்