நவாஸுக்கு எதிரான மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிரான மனுவை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டில் நவாஸ் கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜாவித் இக்பால் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நவாஸ் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பெருமளவு பணத்தை வெளிநாடு களுக்கு கடத்தியுள்ளார். எனவே சட்டவிதிகளின்படி அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதி கிடையாது. அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசார ணைக்கு வந்தது, அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

30 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்