ஆப்கனில் வாகன வெடிகுண்டு வெடிப்பு: 7 பேர் பலி; 41 பேர் காயம்

By ஏஎஃப்பி

ஆப்கானிஸ்தானில் நேற்று தலிபான் தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரால், வாகன வெடிகுண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் 7 பேர் பலியாயினர். மேலும் 41 பேர் காயமடைந்தனர்.

வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றை தலிபான் தீவிர வாத அமைப்பைச் சேர்ந்தவர் ஓட்டி வந்தார். அந்த, வாகனத்தை ஆளுநர், மாகாணத் தலைவர் மற்றும் மாகாண காவல்துறையின் துணைத் தலைவர் ஆகியோர் இருக்கும் கட்டிடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் மேற் கண்ட மூவரும் தப்பிவிட்டாலும், பொதுமக்கள் 7 பேர் பலியாயினர். மேலும் 41 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து மாகாணத் துணை ஆளுநர் முகமது ஜான் ரசோல்யர் கூறும்போது, "ஆட்கடத்தல் தொடர் பான ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உயர் அதிகாரிகள், தன்னார்வ அமைப்பு கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் கூடியிருந்தபோது, அந்தக் கட்டிடத்தின் மீது தற் கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது" என்றார்.

காயமடைந்தோரில் அரசு செய் தித் தொடர்பாளரான ஒமர் ஸ்வாக் கும் ஒருவர் ஆவார். காயமடைந்த பலரும் அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணம் நாங்கள்தான் என்று ட்விட்டர் மூலம் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

இந்தியா

41 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்