ஆன்லைன் தீவிரவாதத்தை தடுக்க உதவுங்கள்: ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிரான்ஸ் வேண்டுகோள்

By ஏபி

இணையம் வழியாக பரப்பப்படும் தீவிரவாத பிரச்சாரங்களை முறியடிக்க உதவ வேண்டும் என்று ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்களை பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரான்ஸின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கெஸீனுவேவுடன் சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது, இணையங்களின் வழியாக தீவிரவாதம் பரப்பப்படுவது குறித்து கவலைத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இணையத்தில் நுழைக்கப்படும் தீவிரவாத பிரச்சாரங்களைப் பற்றி தகவல் அளித்த தருணத்தில் நீக்கிட நிறுவனங்கள் உதவ வேண்டும் என கேட்டக்கொண்டார்.

சமீப காலமாக தீவிரவாத நடவ்டிக்கைகளுக்கு இணையதளங்கள் வழியாக ஆள்சேர்ப்பு நடத்தப்படுவதாக சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்