தன்பாலின வன்கொடுமை வழக்கு: மலேசியத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை- உச்ச நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிமுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முகமது சைபுல் (30) என்பவரை தன்பாலின வன்கொடுமைக்கு அன்வர் உட்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசிய நாட்டு உயர் நீதிமன்றம் அன்வர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து விடுவித்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசார ணையில் அன்வர் உட்பட மொத்தம் 27 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவப் பரிசோதனையின்போது தகவல் களில் ஏதேனும் குறுக்கீடு நடந்திருக்கலாம் என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறி, அன்வருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இதைத் தொடர்ந்து மலேசிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மலேசியாவில் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. இதற்கு முன்பும் பல அரசு அலுவலர்களை நீதிமன்றம் தண்டித்துள்ளது. இந்த வழக்கு அன்வரின் ஊழியரால் கொண்டு வரப்பட்டது. அரசால் கொண்டு வரப்பட்டது அல்ல. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த 2000-ம் ஆண்டு தன்னுடைய கார் ஓட்டுநரை தன்பாலின வன்கொடுமை செய் தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. அப்போது அவருக்கு உயர் நீதிமன்றம் 9 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால் 2004-ம் ஆண்டு அன்வர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மலேசியாவில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்