உலக மசாலா: கொசோவா ஹிட்லர்

By செய்திப்பிரிவு

கொசோவோ நாட்டில் மிட்ரோவிகா நகரில் வசிக்கும் இமின் ட்ஜினொவ்சியை எல்லோரும் ‘கொசோவோ ஹிட்லர்’ என்று அழைக்கிறார்கள். தலை முடி, மீசை, ஆடை, நடை, பாவனை எல்லாமே ஹிட்லரைப் போலவே செய்துகொண்டு, வலம் வருகிறார் இமின். 1998-ம் ஆண்டு ஜெர்மனியிலfருந்து கொசோவோவுக்கு வந்தவர், செர்பியாவுடன் நடந்த யுத்தத்தில் பங்கேற்றார். போரில் ஏற்பட்ட பலத்த காயத்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகிவிட்டது. அதற்குப் பிறகு ஜெர்மனி திரும்பாமல், தன் உருவத்தை ஹிட்லர் போல அமைத்துக்கொண்டார். இமினைப் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பிறகு ஆச்சரியமடைகிறார்கள். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஒரு புகைப்படத்துக்கு 700 முதல் 4000 ரூபாய் வரை வசூலிக்கிறார் இமின். தினமும் 14 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். ஹிட்லர் பேட்ஜ், ஸ்வஸ்திகா சின்னம், ஹிட்லரின் சுயசரிதை போன்றவற்றையும் விற்பனை செய்கிறார்.

இவை தவிர, நகரில் நடைபெறும் திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், இறுதி ஊர்வலங்கள் போன்றவற்றிலும் பங்கேற்க இமினுக்கு அழைப்பு வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றிலும் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாஸிகளின் அடையாளங்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொசோவோவில் வசிப்பதால் இமின் தப்பித்துவிட்டார். “ஹிட்லர் போல இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் என்னைப் பாராட்டி, கைகொடுக்கும்போது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான் இறக்கும் வரை ஹிட்லராகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்” என்கிறார் இமின். அவரது மனைவியும் 5 மகள்களும் தங்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை என்கிறார்கள்.

இங்கே கூட கோட்சேவுக்கு சிலை வைக்கிறேன்னு கிளம்பறாங்க… ஏன் இந்த உலகம் இப்படிப் போகுது?

சைபீரியாவில் உள்ள டுடின்கா நகரில் மிக மோசமான வானிலை நிலவுகிறது. தெருக்களில் எல்லாம் பல அடி உயரத்துக்கு பனி உறைந்து நிற்கிறது. நகருக்கு வரும் குடிநீர்க் குழாய் திடீரென்று வெடித்துச் சிதறியது. அதிலிருந்து பெருகும் தண்ணீரால் நகரமே வெள்ளத்தால் நிரம்பிவிட்டது. இங்கு வசிக்கும் 22 ஆயிரம் குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு மின்சாரமோ, குடிநீரோ கிடைக்கவில்லை. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. சூழ்ந்துள்ள தண்ணீரும் விரைவில் உறைந்துவிட்டதால், மீட்புப் பணிகள் சிக்கலாகிவிட்டன.

அடக் கொடுமையே…

கலிஃபோர்னியாவில் வசிக்கும் பீட்டர் கோசென் கட்டிடக்கலை நிபுணர். பூனைகளுக்காகவே அதிநவீன வீடு ஒன்றை, 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டியிருக்கிறார். பூனைகள் விளையாடுவதற்கு ஏற்றார்போல சுரங்கங்கள், சறுக்கு மரங்கள், அலமாரிகளை அமைத்திருக்கிறார். இங்கே 15 பூனைகள் உல்லாசமாக வசித்து வருகின்றன. கோசென் இரண்டு பூனைகளை வளர்த்து வந்தார். காரில் அடிபட்டு ஒரு பூனை இறந்துவிட்டது. இன்னொரு பூனையான குக்கிக்கு விபத்து ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குக்கி தனிமையில் இருப்பதைத் தவிர்க்க நினைத்த கோசென், ஆதரவற்ற 14 பூனைகளைத் தத்தெடுத்துக்கொண்டார். வெளியில் சென்று விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்தார். பூனைகள் வசித்தாலும் இந்த வீடு மிக அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது.

பூனைக் காவலர்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

58 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்