இந்தியர் மீது அமெரிக்க போலீஸார் கொடூர தாக்குதல்

By செய்திப்பிரிவு

இந்திய முதியவர் ஒருவரை அமெரிக்க போலீஸார் சந்தேகத் தின் பேரில் கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பாய் படேல் (57). இவருடைய மனைவி சகுந்தலா படேல். இவர் களுடைய மகன் சிராக் படேல், அமெரிக்காவின் வடக்கு அலபாமா பகுதியில் இன்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். மகனை பார்க்க சுரேஷ்பாய் அலபாமா சென்றுள் ளார். கடந்த வாரம் ஒரு நாள் காலை நடை பயிற்சிக்காக வெளி யில் சென்றுள்ளார் சுரேஷ்பாய். அங்கும் இங்கும்ஓய்வாக நடந்து கொண்டிருந்தவரை, அங்கிருந் தவர்கள் பார்த்து சந்தேகப்பட்டுள் ளனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரித்துள்ளனர். சுரேஷ்பாய்க்கு ஆங்கில மொழி தெரியாததால் அவர் பேசுவதை போலீஸாரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்போது பேன்ட் பாக்கெட்டுகளில் கைகளை விட்டுள்ளார் சுரேஷ்பாய். உடனே அவரை கீழே தள்ளி போலீஸார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். அதில் சுரேஷ்பாய் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் அவரை நன்கு சோதனை செய்து விட்டு அப்படியே விட்டு சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சிராஜ், தனது தந்தையை மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயத் அக்பருதீன் நேற்று கூறுகையில், ‘‘மீடியாக்களில் வந்த தகவல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இந்திய முதியவர் ஒருவர் மீது அமெரிக்க போலீஸார் அளவு கடந்த பலத்தை பிரயோ கித்துள்ளனர்.

இதுகுறித்து உடனடி யாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்