உக்ரைனில் அமைதி திரும்ப புதிய சமரச திட்டம்: தற்காலிக போர்நிறுத்தம் அமல்

By செய்திப்பிரிவு

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த புதிய சமரச திட்டத்தை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பிரான்ஸ் அதிபர் ஹோலந்தேவும் தயார் செய்துள்ளனர்.

அவர்களின் ஏற்பாட்டின்பேரில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு செல்ல நேற்று தற்காலிக போர்நிறுத்தம் கடைப்பிடிக் கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைனில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படை களுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோவை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அண்மையில் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பிரான்ஸ் அதிபர் ஹோலந் தேவும் அதிபர் பெட்ரோ போரோஷென்கோவை தலைநகர் கீவில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினர்.

அப்போது இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய சமரச திட்டம் குறித்து அதிபர் பெட்ரோவிடம் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தினர்.

அடுத்ததாக ஏஞ்சலா மெர்கலும், ஹோலந்தோவும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்குச் செல்கின்றனர். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து சமரச திட்டம் குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த முயற்சி பலன் அளிக்கக்கூடும் என்று மேற்கத்திய அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியபோது, உக்ரைன் உள்நாட்டுப் போருக்கு அரசியல்ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது, அதேநேரம் ரஷ்யா வின் நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதனிடையே ஏஞ்சலா மெர்கல், ஹோலந்தே ஆகியோர் பல்வேறு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக கிழக்கு உக்ரைனில் நேற்று தற்காலிக போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அங்கு போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்கள் பஸ்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்