ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான மனு ஏப்ரலில் வழக்கு விசாரணை: அமெரிக்க நீதிமன்றம் கோர்ட் உத்தரவு

By பிடிஐ

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி சீக்கியர் உரிமைகள் குழு தொடர்ந்துள்ள வழக்கு மீது ஏப்ரலில் விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதி லவ்ரா ஸ்வைன் பிறப்பித்தார். இந்த விசாரணையில் மனுவின் அந்தஸ்து, மனுவில் உள்ள விவகாரம் தலையிடத்தகுந்ததா, உண்மை நிலவரம், இதர சட்டப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்படும்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற தீவிர முனைப்பு காட்டி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி இந்த நீதிமன்றத்தில் சீக்கிய அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை குறி வைத்து ஆர்எஸ்எஸ் செயல்படுவதாக இந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

1984-ல் பொற்கோயிலில் நடந்த தாக்குதலை தூண்டிவிட்டதிலும் இதற்கு பங்கு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

57 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்