அமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் அத்துமீறல்: ஐ.எஸ். கைவரிசை?

By செய்திப்பிரிவு

அமெரிக்கா ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் (@CENTCOM) ட்விட்டர் வலைதள பக்கத்தில் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இந்த ஹேக்கிங் செயலுக்கு, இராக் மற்றும் சிரியாவில் இருந்து செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டிக் கொண்ட ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது.

இருப்பினும், இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் சதி வேலைதானா என்பது குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி சரியாக 12.30 மணியளவில், @CENTCOM ட்விட்டர் பக்கத்தில் விஷமிகள் சிலர் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட வீரர்கள் பலரின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை #CyberCaliphate என்ற ஹேஷ்டேகை உருவாக்கி பதிவிட தொடங்கினர்.

இதனையடுத்து, அமெரிக்க ராணுவ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் பராக ஒபாமா, சைபர் பாதுகாப்பு, சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக உரையாற்றவிருந்த வேளையில், ராணுவ ட்விட்டர் பக்கத்தில் அத்துமீறப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'வீ ஆர் கமிங்'

மேலும், அமெரிக்க ராணுவ ட்விட்டர் பக்கத்தில் "நாங்கள் வருகிறோம். ஏற்கெனவே உங்கள் பாதுகாப்பு வலைப்பக்கங்களில் ஊடுருவிவிட்டோம். இனி அமெரிக்காவின் பாதுகாப்பு மையங்களில் இருக்கும் ஒவ்வொரு கணினியிலும் ஊடுருவுவோம்" என தீவிரவாதிகள் எச்சரிக்கை நிலைத்தகவல் பதிவிட்டுள்ளனர்.

30 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது:

தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கம் அந்நிறுவனத்தின் உதவியுடன் 30 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் என கூறிய நபர்கள் பதிவு செய்திருந்த ஹேஷ்டேக்கும் எச்சரிக்கை நிலைத்தகவலும் நீக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்