அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் கெர்ரிக்கு அபராதம்

By பிடிஐ

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு அவரது வீட்டு வாசலில் பனிப் பொழிவால் ஏற்பட்ட குவியலை அகற்றாமல் விட்டதற்காக அவருக்கு நகராட்சி நிர்வாகம் 50 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாஸ்டன் நகரில் உள்ள பெக்கான் ஹில் தெருவில் வசிக்கிறார். அமெரிக்காவில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருப்பதால் சாலைகளில் அதிக அளவில் பனிக் கட்டிகள் தேங்கியுள்ளன. அவற்றை நகர நிர்வாகம் அவ்வப்போது அப்புறப்படுத்தினாலும் வீட்டின் வாசலில் தேங்கும் பனிக் கட்டிகளை உரிமையாளர்கள் தான் அகற்றியாக வேண்டும்.

ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜான் கெர்ரியின் வீட்டுமுன் குவிந்த பனிக்கட்டிகள் அனைத்தும் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தன. இந்த நிலையில் ஜான் கெர்ரிக்கு போஸ்டன் நகர நிர்வாகம் இந்திய மதிப்பில் சுமார் 3000 ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக பாஸ்டன் க்ளோப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கெர்ரியின் செய்தித் தொடர்பாளர் க்ளீன் ஜான்சன் கூறும்போது, "கெர்ரிக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை செலுத்தப்பட்டுவிடும். அரசு அதிகாரிகளும் நம்மைப் போன்றவர்கள்தான். சவுதி அரேபிய பயணம் உள்ளிட்டவை போன்ற வெளிநாட்டுப் பயணங்களில் அவர் ஈடுப்பட்டிருந்ததால் இதனை அவர் கவனிக்காமல் இருந்திருக்கிறார்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

24 mins ago

சுற்றுச்சூழல்

34 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

50 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்