அமெரிக்க மாநிலத்தில் இந்தியருக்கு அமைச்சர் பதவி

By பிடிஐ

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சாம் மல்ஹோத்ரா, மனித ஆற்றல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இம்மாநிலத்தில் அமைச்சராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

மேரிலேண்ட் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லேரி ஹோகன், மனித ஆற்றல் துறையின் தலைமைப் பொறுப்புக்கு சாம் மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தார்.

‘சப்சிஸ்டம் டெக்னாலஜீஸ்’ என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாம் மல்ஹோத்ரா, இதற்கு முன், ஆளுநர் ராபர்ட் எல் எர்லிக் தலைமையின் கீழ் தன்னார்வலர் அளவில் பணியாற்றியுள்ளார்.

மேரிலேண்ட் மனித ஆற்றல் துறையில் 6,500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மாநில அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை இத்துறை மேற்பார்வையிட்டு வருகிறது. இத்துறையின் வருடாந்திர பட்ஜெட் ஒதுக்கீடு (மத்திய அரசு ஒதுக்கீடு சேர்த்து) சுமார் 270 கோடி டாலராக உள்ளது.

சாம் மல்ஹோத்ரா மிகச் சிறந்த அமைச்சராகத் திகழ்வார் என்று முன்னாள் ஆளுநர் எர்லிக்கின் ஆலோசகராக பணியாற்றிய திலீப் பாலியாத் நம்பிக்கை தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்