இந்திய பஸ் சேவையை வாகா எல்லையுடன் நிறுத்தியது பாகிஸ்தான்

By பிடிஐ

டெல்லி – லாகூர் பஸ் சேவையை இந்தியாவின் வாகா எல்லையுடன் நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பஸ் சேவையை இந்திய எல்லையுடன் நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் சார்பில் இந்தியா – பாகிஸ்தான் தோஸ்தி பஸ் சேவை நடத்தப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு மார்ச் 16-ந்தேதி இரு நாடுகளுக்கு இடையே மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டு கழகம் கூறுகையில், பாகிஸ்தான்-இந்தியா தோஸ்தி பஸ் போக்குவரத்து வாகா எல்லை வரையே இயக்கப்படும். புதுடெல்லி மற்றும் அமிர்தசரஸ் பகுதிகளுக்கு செல்பவர்கள் வாகா பகுதியில் இருந்து வேறு போக்குவரத்து மூலம்தான் செல்ல வேண்டும்.

இதேபோன்று எல்லையை தாண்டி பாகிஸ்தான் வருபவர்கள் வாகா பகுதிக்கே வர வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்