மனித உரிமைகளை மீறும் இஸ்ரேல்; 16 குழந்தைகள் உயிரிழப்பு - பாலஸ்தீனம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போதுவரை 16 பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் கொன்றுள்ளதாக  அந்நாட்டு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறும்போது, “  கடந்த ஆறுமாதத்தில் காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் 17 தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் 16 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மனித உரிமைகளை மீறுகின்றது” என்று தெரிவித்துள்ளது.

ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.

கடந்த ஆண்டு முதல் காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து  கடந்த சில மாதங்களாகவே பேரணியாகச் சென்று வருகின்றனர்.

இப்பேரணியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா.  சபையின் விசாரணையை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் மீண்டும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்