வடகொரிய அதிபர் கிம்முக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

ஜப்பானில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்து பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில்  பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “சில முக்கிய சந்திப்புகளுக்குப் பிறகு நான் ஜாப்பானிலிருந்து தென்கொரிய செல்ல இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஜி 20 மாநாட்டில் வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கிம்மை சந்தித்து கைக் குலுக்கி ஹலோ சொல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து வடகொரிய, இது தொடர்பாக அதிகாரப்பூர்வாக இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்