கொரிய தீபகற்பத்தில் போர் நடைபெறாது: தென் கொரியா

By ஏஎஃப்பி

கொரிய போர் நடைபெறாது என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே கூறியுள்ளார்.

வடகொரியா கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடத்தி வரும் அணுஆயுத ஏவுகணை சோதனைகளின் விளைவாக கொரிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவும் வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடை என பல மறைமுக மிரட்டலை விடுத்து பார்த்தது. ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாத வடகொரியா அமெரிக்காவின் ராணுவத் தளவாட பகுதியான குவாம் தீவை தாக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தது.

இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் இதுவரை உலகம் எதிர் பார்க்காத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவுக்கு மிரட்டல் விடுத்தார்.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஆகஸ்ட் மாத இறுதியில் போர் ஒத்திகை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கொரிய பிராந்தியத்தில் போர் நடைபெறாது என்று தென் கொரிய அதிபர் மூன் கூறியுள்ளார்.

அதிபராக பதவியேற்று 100 நாள் நிறைவு விழாவில் மூன் பேசும்போது," கொரிய தீபகற்பத்தில் எந்தப் போரும் நடைபெறாது என்று தென்கொரிய மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். போர் நடைபெற நான் அனுமதிக்க மாட்டேன்" என்றார்.

தென் கொரியாவைப் பொறுத்தவரை 1953-ம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு, அந்நாட்டை வடகொரியாவிடமிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமெரிக்க படைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வாஷிங்டனில் ட்ரம்ப் பேசும்போது, "வட கொரியா தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தென் கொரியாவுடன் கலந்தாலோசித்தப் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்