ஊழல் வழக்கில் நவாஸுக்கு சம்மன்

By செய்திப்பிரிவு

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 1990-களில் நவாஸ் பிரதமராக இருந்தபோது லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் ‘பனாமா பேப்பர்ஸ்’ மூலம் கடந்த 2016-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் உடனடியாக விலக உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்த கடந்த 28-ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நவாஸ் மீதான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் வழக்கு விசாரணைக்காக லாகூர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் ஹூசைன், ஹாசன் ஆகியோருக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் மனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 secs ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்