ஹிட்லரின் 5 ஓவியங்கள் பிரிட்டனில் ஏலம்

By பிடிஐ

ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் 5 ஓவியங்கள் பிரிட்டனில் ஏலத்துக்கு வருகிறது.

நம் அனைவருக்கும் ஹிட்லர் என்றால் அவர் ஒரு சர்வாதிகாரி என்ற நினைவுதான் வரும். ஆனால் அவர் சிறந்த ஓவியர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். ஆம்; அவர் தனது வாழ்நாளில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஓவியங்களை வரைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹிட்லரின் 5 ஓவியங்கள் பிரிட்டனைச் சேர்ந்த முல்லாக்ஸ் ஏல நிறுவனத்தின் மூலம் வரும் 6-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதில் 4 ஓவியங்களில் ஏ.ஹிட்லர் என்ற கையெழுத்து இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் கையெழுத்து இல்லாவிட்டாலும், அவருடையதுதான் என நம்பப்படுகிறது. இவற்றில் 2 ஓவியங்கள் 1900-மாவது ஆண்டில் வரையப்பட்டவை ஆகும்.

ஒரு கிராமத்தின் தெரு, ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வளரும் மலர் செடி, ஹிட்லர் பிறந்த நாடான ஆஸ்திரியாவின் டர்ன்ஸ்டீன் நகர நுழைவு வாயில் தோற்றம் உள்ளிட்டவை ஏலத்துக்கு வர உள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஒவ்வொரு ஓவியமும் ரூ.4.25 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்