ஐ.நா. அமைப்புகளுக்கு இந்தியா ரூ.70 கோடி நிதியுதவி

By செய்திப்பிரிவு

வரும் 2014-ம் ஆண்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுக்கு இந்திய அரசு ரூ.70 கோடி நிதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து, ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி மஞ்சீவ் சிங் புரி, ஐ.நா. பொது சபையில் கூறுகையில், "இந்தியாவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அப்படி இருந்தபோதிலும், ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகள் உலகம் முழு வதும் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளுக்கு இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது" என்றார்.

அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள ஐ.நா. வளர்ச்சி திட்டத்துக்கு (யுஎன்டிபி) ரூ.28.35 கோடியும், உலக உணவு திட்டத்துக்கு ரூ.12 கோடியும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் முகமைக்கு ரூ.6.3 கோடியும் இந்திய அரசு நிதி வழங்கி உள்ளது.

இதுதவிர, யுஎன் குழந்தைகள் நிதி (யுனிசெப்), யுஎன் மக்கள் தொகை நிதி, போதை மருந்து மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐ.நா. அமைப்பு, தன்னார்வ அறக்கட்டளை நிதி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும் மத்திய அரசு நிதியுதவி வழங்கி உள்ளது.

மேலும், ஐ.நா. பெண்கள் அமைப்புக்கு 5 ஆண்டுகளில் ரூ.31 கோடி நிதி வழங்க ஒப்புக் கொண்டுள்ள இந்திய அரசு, இதுவரை ரூ.18 கோடியை வழங்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்