தென்சீனக் கடலில் யுஎஸ்எஸ் போர்க் கப்பல் ரோந்து: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

By ஏபி

தென்சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் லாசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருப் பதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதி மற்றும் அங்குள்ள சில தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான், புருணே உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடு களுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது. இந்த வகையில் ஆசிய பசிபிக் நாடுகளை சீனாவுக்கு எதிராக அமெரிக்கா திருப்பி வருகிறது.

தென்சீனக் கடலில் ஸ்பார்டி தீவு உள்ளது. இந்தத் தீவுப் பகுதியை சீனாவும் பிலிப்பைன்ஸும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தீவுக்கு 12 கடல் மைல் தொலைவில் அமெரிக் காவின் யுஎஸ்எஸ் லாசன் போர்க்கப்பல் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டது.

அந்த கடல் பரப்பு தங்கள் எல்லை என்று கூறியுள்ள சீன அரசு, அமெரிக்க போர்க்கப்பல் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் நேற்று நிருபர்களிடம் கூறிய போது, அமெரிக்க கடற்படை தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் சீன ராணுவத்துக்கு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த குற்றச்சாட்டை அமெரிக்க கடற்படை மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியபோது, சர்வ தேச கடல் எல்லையில்தான் அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. சம்பந்தப் பட்ட ஸ்பார்ட்டி தீவுகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று தெரிவித்தன.

இதனிடையே ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து பணியை மேற்கொண்டிருக்கும் பகுதி சர்வதேச கடல் எல்லை என்று அந்த நாடுகள் தெரிவித் துள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த மாதம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது தென் சீன கடல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது அந்த விவகாரத் தால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

39 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்