அசாஞ்சே கைது வாரன்ட் சரியே: சுவீடன் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது வாரன்ட் சரியானதே என்று சுவீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான அமெரிக்க அரசின் 5 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தப் பின்னணியில் சுவீடனில் அசாஞ்சே தங்கியிருந்தபோது 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக அந்த நாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்யவும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2012 ஜூனில் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரன்டை ரத்து செய்யக் கோரி சுவீடன் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், அசாஞ்சேவை கைது செய்ய பிறக்கப்பட்ட கைது வாரன்ட் சரியானதே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து சுவீடன் நீதிமன்றத்தில் அசாஞ்சே தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்