உலக மசாலா: ரியல் ஹீரோ ஜாக்!

By செய்திப்பிரிவு

ஐரோப்பாவின் மால்ட்டாவில் வசிக்கும் 7 வயது ஜாக் வெல்லா அரிய ஹார்மோன் குறைபாட்டால் (Rapid-onset Obesity with Hypothalamic dysfunction, Hypoventilation and Autonomic Dysregulation) எடை அதிகரித்து வருகிறான். இந்தக் குறைபாட்டுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம், ஆனால் எடை அதிகரிக்கக்கூடாது. அதனால் டிரையத்லான் பயிற்சிகளை மேற்கொள்கிறான். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஜாக்கின் எடை வேகமாக அதிகரித்தது. சில வாரங்கள் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் உணவாகக் கொடுத்துப் பார்த்தோம். அப்போதும் எடை குறையவில்லை. உடனே மருத்துவரைச் சந்தித்தோம். அரிய ஹார்மோன் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முடியவில்லை. இந்தக் குறைபாட்டைச் சரி செய்வதற்கு தற்போது மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கவனமாகப் பார்த்துக்கொண்டால் ஐந்திலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை மரணத்தைத் தள்ளிப் போடலாம் என்றார்கள். நாங்கள் உடைந்து போனோம். முடிந்தவரை ஜாக்கின் ஆயுளை நீட்டிக்க முடிவெடுத்தோம். டிரையத்லான் பயிற்சிகளை மேற்கொள்ள வைத்திருக்கிறோம். இதன் மூலம் ஜாக்கின் எடை அதிகரிக்காமல் இருக்கிறது. வாரத்துக்கு மூன்றுமுறை பயிற்சிகளுக்குச் செல்கிறான். வெப்பநிலை அதிகரித்தால் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். அதனால் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பான். வாழ்வதற்காக ஒரு குழந்தை இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது” என்கிறார் ஜாக்கின் அப்பா வெல்லா. “ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் மட்டும் உடல் எடை அதிகரிக்கும் என்பதில்லை. இது போன்ற குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். அதிகம் தெரியாத, இதுவரை 75 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ள ஒரு பாதிப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் எழுதினேன். அதைப் பார்த்து மால்ட்டா முழுவதிலுமிருந்து எங்களுக்கு உதவிகள் செய்யக் காத்திருக்கிறார்கள்” என்கிறார் அம்மா மருஷ்கா வெல்லா.

ரியல் ஹீரோ ஜாக்!

ரஷ்யாவில் இயங்கி வரும் மிகப் பெரிய லாயல் சூப்பர் மார்க்கெட்டைப் பிரபலப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவரவர் பெயரோடு சூப்பர் மார்க்கெட்டின் பெயரையும் சேர்த்து சட்டப்படி மாற்றிக்கொள்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்கும் ஒரு பெண், கணவரிடம் அனுமதி பெறாமல் தன் பெயரை மாற்றிக்கொண்டார். விஷயம் அறிந்த கணவன், தன்னைக் கேட்காமல், தன் அனுமதி இல்லாமல் எப்படிப் பெயரை மாற்றலாம் என்று சண்டையிட்டார். அவரது கோபம் அதிகமாகவே மனைவியின் கார் கண்ணாடிகளை உடைத்தார். கான்கிரீட் கலவையை வரவழைத்து, கார் முழுவதும் நிரப்பினார். “என் மனைவிக்கு மிகவும் பிடித்த இந்த கார் இப்போ எப்படி இருக்கிறது?” என்று கேட்டு ஆணவமாகச் சிரித்தார். அத்தனை செயல்களையும் ஸ்மார்ட் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். ரஷ்யாவை தாண்டி வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த வீடியோ.

என்ன ஒரு வில்லத்தனம்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்