பிரிட்டனில் 676 பள்ளிக் குழந்தைகள் ஹாரி பாட்டர் உடையணிந்து கின்னஸ் சாதனை

By பிடிஐ

பிரிட்டனில் 676 பள்ளிக் குழந்தைகள் ஹாரி பாட்டர் புதினத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து வந்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.

பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங் எழுதிய புகழ்பெற்ற கற்பனை புதினமான ஹாரி பாட்டரின் முதல் பாகம் கடந்த 1997, ஜூன் 26-ல் வெளியானது. நேற்றுடன் அந்த புதினம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண் டாடும் வகையில் பிரிட்டனின் போல்டன் நகரைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் 676 பேர் ஹாரி பாட்டரில் வரும் கற்பனை கதாபாத்திரங்களின் உடைகள், மூக்கு கண்ணாடிகள் ஆகியவற்றை அணிந்து வந்தனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

போல்டன் அருங்காட்சியகம், நூலக சேவைகள் மற்றும் 11 தொடக்க பள்ளிகள் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் திருந்தன. இதற்கு முன் கடந்த 2015-ல் பிரிட்டனின் டான்பிரிட்ஜ் ஹவுஸ் பள்ளியைச் சேர்ந்த 521 பேர் ஹாரி பாட்டர் உடை அணிந்து கின்னஸ் சாதனை படைத்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

கருத்துப் பேழை

19 mins ago

சுற்றுலா

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்