கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம்: ஐரோப்பிய யூனியன் அதிரடி

By ஏபி

கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் சேவை, விதிமுறைகளை மீறியதற்காக சந்தைப் போட்டியைக் கண்காணிக்கும் ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பு அமைப்பு கூகுள் நிறுவனத்துக்கு 2.42 பில்லியன் யூரோக்கள் என்ற மிகப்பெரிய தொகையினை அபராதமாக விதித்தது.

ஐரோப்பிய கட்டுப்பாட்டு அமைப்பு கூறும்போது, “ஒரு தேடல் எந்திரமாக கூகுள் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. இன்னொரு கூகுள் தயாரிப்புக்கு சட்டவிரோதமாக அனுகூலங்களை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளது.

கலிபோர்னியா நிறுவனமான மவுண்டன் வியூவுக்கு 90 நாட்களுக்குள் அதன் நடவடிக்கைகளை நிறுத்த அவகாசம் வழங்கியுள்ளது, இல்லையெனில் அதன் தாய் நிறுவனமான அல்ஃபபெட் தனது உலகளாவிய விற்பனையில் 5% அபராதம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைப் போட்டி விதிமுறைகளை கண்காணித்து வரும் அமைப்பு, பிற சிறந்த தெரிவுகள் இருந்தும் கூகுள் தனது ஷாப்பிங் சர்வீசுக்கு சட்ட விரோதமாக முக்கியத்துவம் கொடுத்தது.

ஆனால் கூகுள் நிறுவனமோ, வாடிக்கையாளர்கள் எளிதாக தங்களுக்கு வேண்டிய பொருட்களை தேட தங்களது தேடல் முடிவுகளை பேக்கேஜாக வழங்க முயற்சி செய்கிறது என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

18 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

56 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்