ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு: ட்ரம்ப்

By பிடிஐ

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு. இது அந்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்கு, வாழ்த்துகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போது, "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவாகும். இதனால் இங்கிலாந்துக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது" என்றார்.

ட்ரம்ப்புடான சந்திப்பு குறித்து தெரசா மே கூறும்போது, "இந்த வருடத்தின் இறுதியில் இங்கிலாந்து வர ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க - இங்கிலாந்து பாதுகாப்பு உறவு என்பது மிக ஆழமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பர தேசிய நலன்களை உள்ளடக்கியது" என்று கூறினார்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவரை சந்தித்த முதல் உலகத் தலைவர் தெரசா மே ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்