கன்சாஸ் துப்பாக்கிச் சூடு: கொலையாளியிடம் நீதிபதி விசாரணை

By செய்திப்பிரிவு

கன்சாஸ் மாகாணம் ஒலாத்தேவில் இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸை கொலை செய்த அமெரிக்க கடற்படை வீரர் ஆடம் பூரிண்டனை (51) போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடம் துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு இந்தியர் மாதசாணி காயமடைந்தார். இரு இந்திய இளைஞர்களையும் காப்பாற்ற முயன்ற கிரிலாட் என்பவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக ஆடம் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜான்சன் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆடமிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஸ்டீவ் பின்னர் நிருபர்களிடம் கூறியபோது, ஆடமுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

இனவெறி தாக்குதலில் ஆடம் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்களை எப்.பி.ஐ. போலீஸார் திரட்டி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 mins ago

விளையாட்டு

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்