உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பேட்டி

By செய்திப்பிரிவு

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மற்றும் அரசியல் ராஜதந்திரம் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்று அமெரிக்காவின் தேசிய பாது காப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக் கிழமை நிருபர்களிடம் கூறுகை யில், “கிரைமியா ஆக்கிரமித்து, அதை தனது நாட்டுடன் இணைத் துக் கொண்டதற்கும், உக்ரைன் தொடர்பாக மேற்கொண்டு வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை களுக்கும் நமது எதிர்ப்பை ரஷியாவுக்கு தெளிவாக கூறி விட்டோம்.

அங்குள்ள ரஷ்யப் படைகள் வாபஸ் பெறப்படவேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் இப் பிரச்சினைக்கு தீர்வு காணப் படவேண்டும். இதனை ரஷ்யா ஏற்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இதற்கான முயற்சி களில் ஈடுபடுவோம்.

இந்த விவகாரத்தில் நானும், அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, பாது காப்பு அமைச்சர் ஹேகல் உள்ளிட்ட தலைவர்களும் முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டணி மற்றும் நட்பு நாடுகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன், ஐரோப்பாவுக்கு வெளியில் உள்ள பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொரு ளாதாரத் தடைகள் விதிக்க முன்வந்துள்ளன.” என்றார் சூசன் ரைஸ்.

புதின் ஒப்புதல்

இதனிடையே கிரைமியாவை ரஷ்ய கூட்டமைப்புடன் இணைக்கும் சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். மாஸ்கோவில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினர்.

உடன்பாடு கையெழுத்து

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் அதிகரித்துள்ளன. மேலும் எரிபொருள் தேவைக் காக ரஷ்யாவை உக்ரைன் சார்ந்திருப்பதை குறைக்கும் மேற்கத்திய நாடுகள் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது தொடர்பான ஒத் துழைப்பு உடன்பாட்டில் ஐரோப்பிய யூனியன் தலை வரும், உக்ரைன் இடைக்கால பிரதமரும் கையெழுத்திட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

55 mins ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்