பசிபிக் கடலில் மூழ்கிய ‘ஸீலாண்டியா’ என்ற கண்டம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

By ராய்ட்டர்ஸ்

தென்-மேற்கு பசிபிக் கடலின் அடியில் மூழ்கிய கண்டம் ‘ஸீலாண்டியா’ என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜியலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா என்ற இதழில் இதன் விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கண்டமாகும் ஸீலாண்டியா. இதன் நிலப்பரப்பளவு 4.5 மில்லியன் சதுர கிமீ ஆகும். இது 94% கடல்நீருக்கடியில் மூழ்கியுள்ளது. இதன் வெளியே தெரியும் மேல் பகுதிகள்தான் நியூஸிலாந்தும் நியூகேலடோனியாவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டம் ஆஸ்திரேலியாவிலிருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்து பசிபிக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கொண்ட்வானாலேண்ட் என்ற சூப்பர் கண்டம் உடைந்து பிரிந்ததன் ஒருபகுதி இதுவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

கருத்துப் பேழை

18 mins ago

சுற்றுலா

55 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்