வட கொரியா, தென் கொரியா அமைதிப் பேச்சுக்கு சம்மதம்

By பிடிஐ

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான நேற்று வட கொரியாவின் உயர்நிலைக் குழு தென் கொரியாவின் இன்சியான் நகருக்கு வருகை தந்தது.

அப்போது அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்க இருநாடு களும் சம்மதம் தெரிவித்தன. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பனிப் போர் நடைபெற்று வருகிறது. அண்மையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து போர் ஒத்திகையை நடத்தின.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்து வோம் என்று எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வந்த வடகொரிய குழு, தென் கொரி யாவின் மூத்த அதிகாரியை சந்தித்துப் பேசியது. வட கொரியா – தென் கொரியா இடையே போர் பதற்றம் நிலவிவந்த நிலையில், 5 ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

வட கொரியாவில், ஆட்சி அதிகாரத்தில் அதிபருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹவாங் பியாங் சோ தலைமையில் வந்திருக்கும் இக்குழுவினர் தென் கொரியா அதிபர் பார்க் கெயூன் ஹையை சந்திப்பார்களா என்றுத் தெரியவில்லை.

என்றாலும் வட கொரியாவின் விருப்பத்தை அறியவும், இரு நாடுகளிடையே உறவை சீரமைக்கவும் இக்குழுவினரை தென் கொரிய அதிபர் சந்திக்க வேண்டும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்